
திருச்சி தூய வளனார் கல்லூரியின் பொருளாதாரத்துறை ஆனது இன்று 13.02.2025 “மத்திய வரவு செலவு திட்டம் 2025- 26” என்ற தலைப்பில் குழு விவாதம் கல்லூரியின் சமுதாய கூடத்தில் நடத்தியது.


இந்நிகழ்வில் பொருளாதாரத் துறை தலைவர் ம. சுவக்கின் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் பேரா. ஜி. இருதயராஜ் நினைவு பரிசு வழங்கினார். இவ்விவாதத்தில் கல்லூரியின் முன்னாள் மாணவர் திரு. அ. தனராஜ் மற்றும் முன்னாள் முதன்மை ஆணையர் வருமான வரித்துறை கோட்டயம், கேரளா, நடுவராக பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.

விவாதத்தின் பங்கேற்பாளராக பொருளாதார துறையின் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் திரு. முகமது ரசூல்கான், செல்வி அபிஷா, செல்வி ராஜேஸ்வரி மற்றும் இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவ, மாணவிகள் செல்வி எப்சீபா, செல்வன் நேப்பியர் ஜாக், செல்வி ஜீவா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பேராசிரியை ஜெ. ஜெயஸ்ரீ நாயக்கன் நன்றி உரை வழங்கினார்.















