• Home
  • தமிழ்நாடு
  • புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமானது 13/02/2025 முதல் 19/02/2025 வரை சி. அய்யம்பாளையம் மேலூர், சி. அய்யம்பாளையம் கீழூர், சாலக்காடு வடக்கு, தெற்கு, கருங்காடு, மணச்சநல்லூர் தொகுதி  கிராமத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமானது 13/02/2025 முதல் 19/02/2025 வரை சி. அய்யம்பாளையம் மேலூர், சி. அய்யம்பாளையம் கீழூர், சாலக்காடு வடக்கு, தெற்கு, கருங்காடு, மணச்சநல்லூர் தொகுதி  கிராமத்தில் நடைபெற உள்ளது.

Email :220

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமானது 13/02/2025 முதல் 19/02/2025 வரை சி. அய்யம்பாளையம் மேலூர், சி. அய்யம்பாளையம் கீழூர், சாலக்காடு வடக்கு, தெற்கு, கருங்காடு, மணச்சநல்லூர் தொகுதி  கிராமத்தில் நடைபெற உள்ளது.

முகாமின் தொடக்க விழாவானது 13/02/2025 இன்று அய்யம்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது விழாவின் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக, நாட்டு நலப்பணி திட்டம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் P. ராமஜெயம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர். புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி  இசபெல்லா  ராஜகுமாரி அவர்களின் முன்னிலையிலும், கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி அவர்களின் தலைமையில் விழாவானது இனிதே தொடங்கியது.

வட்டார சுகாதார ஆய்வாளர் திரு. எஸ். சந்தோஷ் அவர்களும், முனைவர் பாலச்சந்தர் சமூக ஆர்வலர் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. ரமேஷ்பாபு அவர்கள் சிறப்புரை ஆற்றினார், தமிழ்நாடு இபேப்பர். காம், நாட்டு நல நலப்பணித்திட்ட மாணவிகளுக்கு மனிதநேயம் என்ற தலைப்பில் கவிதை போட்டி  நடத்த அழைப்பு வழங்கி, புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட  மாணவிகள் முகாமில் கலந்து கொண்டு சிறப்பாக நலப்பணி செய்தனர்.

கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் மெர்லின் கோகிலா அவர்கள் முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்கும் விதமாக நல்லதொரு வரவேற்புரையை வழங்கினார். மேலும் நாட்டு நல பணி திட்ட அலுவலர் பேரா. குழந்தை பிரியா அவர்கள் நன்றியுரை கூறினார். மேலும் முகாமில் மாணவிகள்  பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர் அவைகள்,
1. அழிந்து வரும் பாரம்பரிய கலைகள் பற்றிய விழிப்புணர்வு
2. கிராமத்தை மேம்படுத்துதல்
3. பேரிடர் காலங்களில் பொதுமக்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள்.
4. மனநல விழிப்புணர்வு
5. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு
6. போதை விழிப்புணர்வு. மேலும் ச. அய்யம்பாளையத்தை சேர்ந்த நெடுங்குளத்தில் அரசு தொடர்பான  தோட்டக்கலை பயிர்கள் செழித்து வளர, களைகளை நீக்கி, செடிகளை நீக்கம் செய்து மரங்கள் கவாத்து செய்து இடத்தை சுத்தம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts