• Home
  • தமிழ்நாடு
  • “குழந்தைகள் மத்தியில் சுயக்கற்றல் (Self Learning) பழக்கம்”.
தமிழ்நாடு

“குழந்தைகள் மத்தியில் சுயக்கற்றல் (Self Learning) பழக்கம்”.

Email :203

குழந்தைகள் மத்தியில் சுயக்கற்றல் (Self Learning) பழக்கம்”
 
எஸ். சிவக்குமார், முதல்வர் (பணி நிறைவு), மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம்.

திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள குழந்தைகள், பள்ளி முடிந்தபின் தங்களது சுயக்கற்றல் முறையை பயன்படுத்தி தானாகவே படிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், பாடங்களை புரிந்து கொள்ளும் ஆழமான மனோபாவம், தன்னம்பிக்கை, மற்றும் தொடர்ச்சி வாய்ந்த கற்றல் பழக்கம் உருவாகியுள்ளது.

கற்றலின் தொடர்ச்சியை உறுதி செய்ய, விடுமுறை நாட்களிலும் பெற்றோர் கண்காணிப்புடன் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் வீட்டிலேயே படிக்கின்றனர். பெற்றோர், வீட்டில் கரும்பலகை தொங்கவிட்டு அதில் எழுதச் செய்து குழந்தைகளின் எழுத்துத் திறனை மேம்படுத்த, அவர்களது அறிவுத்திறன் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றனர். 

தொடர்ச்சியான கற்றலின் தாக்கம் (Impact of Consistency in Learning)
1. நினைவாற்றல் மேம்பாடு தொடர்ந்து பயிற்சி செய்தால், மாணவர்கள் கற்றதை நீண்ட நாட்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
2. தன்னம்பிக்கை வளர்ச்சி தாமாகவே பயிற்சி செய்யும் பழக்கம் குழந்தைகளில் தன்னம்பிக்கையை உருவாக்கும். 
3. கல்வியில் சிறந்த முன்னேற்றம் பாடங்களை புரிந்து கொள்ளும் ஆழமான அறிதல் மற்றும் கட்டுபாடுடன் படிக்கும் பழக்கம் வளர்கிறது. 
4. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் குழந்தைகள் இணைந்து செயல்படுவதால், கற்றலின் தரம் உயரும்.

கற்றல் தொடர்ச்சியாக நடைபெறும் போது மட்டுமே கல்வியில் சிறந்த முன்னேற்றம் காண முடியும் என்பதனை உணர்ந்து, மாணவர்கள் விருப்பத்துடன் படிக்கும் மனப்பான்மையை பெற்றுள்ளனர். 

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த சுயக்கற்றல் முறையை நடைமுறைப்படுத்தி, கல்வியில் சிறந்து விளங்கச் செய்யலாமே! 

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts