
திருச்சி புனித சிலுவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் “வாழ்க்கை விலைமதிப்பற்றது தற்கொலையை நிறுத்துங்கள்” என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் பொருளாதார துறை தலைவர் திருமதி மர்லின் தலைமை தாங்கினார்கள்.
பிரெஞ்சு துறை திருமதி ஹேமலதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆத்மா மனநல மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு கரன் லூயிஸ் அவர்கள் சிறப்புரை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



அவர்களுக்கு ஆத்மாஸ் மைன்ட் மாத இதழ் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியை கதிர் ஒளி தொண்டு நிறுவனம் Er. சரவணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

