தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் மாநில அளவிலான வானவில் மன்ற போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி – 2025 தொடக்கம்.
சென்னை, 12 பிப்ரவரி 2025: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் மாநில அளவிலான வானவில் மன்ற போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி – 2025 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக மையத்தில் இன்று தொடங்கியது. இந்நிகழ்வை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.

பள்ளிக்கல்வித்துறையின் உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மாணவர்கள் அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், மாநிலம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அறிவியல் மற்றும் புதுமை சார்ந்த செயல்முறைகளை விளக்கிக்காட்டினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெங்கடாபுரம் மாணவர் ROKESH கண்காட்சியில் தனது படைப்புகளை காண்பித்தார். அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழிகாட்டியாக இருந்து உதவினர்.

இந்நிகழ்ச்சி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை வளர்த்தல், கண்டுபிடிப்பு முயற்சிகளை ஊக்குவித்தல், என பல்வேறு திறன்களை வளர்க்கும் ஒரு முக்கிய மேடையாக அமைந்துள்ளது. முனைவர் P.மணி (Deputy Director,SCERT) மாணவனுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
















