புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி, திருக்குறள் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் சாதனைத் திருவிழா நடைபெற்றது. நேரு நினைவுக் கல்லூரியில் 07-02-2025 வெள்ளிக்கிழமை காலை அன்று 9.30 மணியளவில் தொடங்கி திருவள்ளுவர் திடலில் திருக்குறளின்1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் சாதனைத் திருவிழா நடைபெற்றது.

இதில் இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு படிக்கும்
மு. பவித்ரா அவர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் வியப்பில் ஆழ்த்தினார். விழாவின் தொடக்கமாக கல்லூரித் தலைவர் திரு. பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையேற்று மாணவியைப் பாராட்டி’ “திருக்குறள் தேன் தமிழ்ச்செல்வி” எனும் பட்டத்தினை வழங்கி வாழ்த்தினார்.
கல்லூரிச் செயலர் திரு. பொன். இரவிச்சந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் அவர்கள், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிறைவாக பேராசிரியர். அ.சசிகலாதேவி நன்றியுரை வழங்கினார்.

தமிழாய்வுத்துறைப் பொறுப்பாளர் முனைவர் சி. பிரபாகரன் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார் . நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் தமிழாய்வுத்துறை மாணவர்களும் பிறதுறை மாணவர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.















