திருச்சி கோல்டன் தடகள சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய கோடைகால தடகள பயிற்சி முகாம் நிறைவு விழா திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் மாலை 6.00 திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில், பொருளாளர் ரவிசங்கர், துணை செயலாளர் கனகராஜ், ரமேஷ், நடராஜ் ஆகியோர் முன்னிலை நடந்தது.
இந்த பயிற்சி முகாமில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள பயிற்சிகளை பெற்றனர்.
நிறைவு விழாவில் பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் முத்த தடகள சங்க ராஜேந்திரன், காணிக்கை இருதயராஜ், ரங்கச்சாரி, சுந்தரமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி, பாராட்டினார்கள்.

மேலும், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம், இளங்கோ, மோகன்ராஜ், ஆரோக்கியராஜ், அருண், சரவணன், முஸ்தபா, கார்த்தி பயிற்சியாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் மாணவர்களுக்கு தொடர்ந்து விளையாட்டில் சாதிக்க ஊக்கமளிக்கும் வகையில் அறிவுரைகள் வழங்கினர். விழாவில் அலெக்ஸ், சுகாதர், கோபி, ரமேஷ் தடகள சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்கள்.












