• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி ரயில்வேயில் 40 ஆண்டுகள் பணியாற்றிய ஆர். சண்முகவேலுக்கு பணி நிறைவு பாராட்டு விழா!
தமிழ்நாடு

திருச்சி ரயில்வேயில் 40 ஆண்டுகள் பணியாற்றிய ஆர். சண்முகவேலுக்கு பணி நிறைவு பாராட்டு விழா!

Email :47

திருச்சி ரயில்வேயில் 40 ஆண்டுகள் பணியாற்றிய ஆர். சண்முகவேலுக்கு பணி நிறைவு பாராட்டு விழா!
திருச்சி: திருச்சி ரயில்வே கோட்டத்தில் சீனியர் அக்கவுண்டன்ட் பிரிவில் 40 ஆண்டுகள் பணியாற்றி, வரும் 30.10.2026 அன்று பணி நிறைவு செய்ய உள்ள தோழர் ஆர். சண்முகவேல் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 21.10.2026 அன்று நடைபெற்றது.
இந்த விழாவில், மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், தொழில் அதிபர் நெடுஞ்செழியன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் தேவராஜன், பி. சீனிவாசன், பாபு பெர்னாண்டஸ், ரவிச்சந்திரன், பாலசுப்ரமணியன், தாமரைக்கண்ணன், ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆர். சண்முகவேலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துச் சிறப்பித்தனர். நான்கு தசாப்தங்களாக ரயில்வே துறையில் பணியாற்றி, தனது நீண்டகால சேவையை நிறைவு செய்யும் ஆர். சண்முகவேலின் பணி அனுபவங்களையும் சேவையையும் பாராட்டி, அவரது ஓய்வுக்காலம் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், மனநிறைவும் நிறைந்ததாக அமைய விழாவில் பங்கேற்ற நண்பர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் வாழ்த்தினர்.
விழாவில் ரயில்வே தொழிலாளர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டு பணி நிறைவு விழாவைச் சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts