“மனம் நலமெனில், வாழ்வு வளமாகும்” – உலக மனநல தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
ஶ்ரீமத் ஆண்டவன் மற்றும் அறிவியில் கல்லூரியின் சமூகப் பணித்துறை சார்பில் உலக மன நல தினத்தை முன்னிட்டு புனித மரியன்னை தொடக்கப்பள்ளியில் “மனம் நலமெனில், வாழ்வு வளமாகும் ” என்ற தலைப்பில் பள்ளி குழந்தைகளுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகளுக்கு மன நலத்தின் முக்கியத்துவம், நேர்மறை சிந்தனை மற்றும் மன அழுத்தத்தின் விழிப்புணர்வு குறித்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புனித மரியன்னை தொடக்கப் பள்ளியின், தலைமை ஆசிரியரான அருட்சகோதரி, மார்கரேட் மேரி தலைமை உரையை கூறி தொடங்கி வைத்தார். வாய்ஸ் அறக்கட்டளையின் நிகழ்ச்சி ஒருங்கினணப்பாளரான திரு. K. சின்னராசு, அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து குழந்தைகளுக்கு மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித்துறை மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். தேதி : 21/10/2026
இடம் : புறத்தாக்குடி.










