• Home
  • தமிழ்நாடு
  • உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிளாஸ்டிக் அகற்றும் பணி
    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, “பிளாஸ்டிக் இல்லா பூமி”.
தமிழ்நாடு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிளாஸ்டிக் அகற்றும் பணி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, “பிளாஸ்டிக் இல்லா பூமி”.

Email :1

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிளாஸ்டிக் அகற்றும் பணி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, “பிளாஸ்டிக் இல்லா பூமி” என்ற நோக்கத்துடன் திருச்சி பொன்மலை மைதானத்தில் கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் தண்ணீர் அமைப்பு,

மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொன்மலை கோல்டன் தடகள கிளப் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

இந்த தூய்மை பணிக்கு மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலப் பொருளாளர், தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் தலைமையேற்று, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டார்.
பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு இந்த நிகழ்வின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts