• Home
  • தமிழ்நாடு
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி!
தமிழ்நாடு

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி!

Email :302

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி. ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி இராமன் விளைவை முன்னிட்டு சர்.சி.வி.இராமனுடைய இராமன் விளைவை நினைவு கூறும் வகையில் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நான்காம் ஆண்டாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியை வட்டாரக்கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார் துவக்கி வைத்தனர்.

வட்டாரக்கல்வி மேற்பார்வையாளர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சாகுல் அமீது வரவேற்றார். மாணவர்களுடைய பல்வேறு அறிவியல் சிறந்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுப் பெற்றோர்களுக்கு செய்து காட்டப்பட்டன.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் எச்சரிக்கை அலாரம் அடிக்கும் கைத்தடி, தண்ணீரை சுத்தமாக்கும் கருவி,ஜேசிபி,மின் தூக்கி மிருகக் காட்சிசாலை, நுரையீரல் மாதிரி மைக்ரோஸ்கோப் கொண்டு சோதனைகள், குளிரூட்டும் இயந்திரம், மழைநீர் சேகரிப்பு, நிறங்காட்டி, மூலிகைத் தாவரங்கள் தொகுப்பு, எரிமலை, தண்ணீர் நிரம்பி வழிந்தால் அதனைத்தடுக்கும் எச்சரிக்கைக்கருவி என 74 படைப்புகள் கண்காட்சியில் இடம்  பெற்றிருந்தன.
மேலும் சர்சிவி இராமன்  மற்றும் பல்வேறு விஞ்ஞானிகளுடைய படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

அரசுப்பள்ளியில் படித்து விஞ்ஞானிகளாக வெற்றிக்கொடி நாட்டிய அப்துல் கலாம்,மயில்சாமி அண்ணாதுரை, சந்திராயன் வீர முத்துவேல் மற்றும் பல விஞ்ஞானி படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.

மேலும் மாணவருடைய அறிவை விரிவு செய்யும் விதமாக அறிவியல் சார்ந்த புத்தகங்களும் புத்தகக் கண்காட்சியும் கூடுதலாக இடம் பெற்று இருந்தது. இந்நிகழ்வு மாணவர்களை இன்ஸ்பயர் அவார்டு எனப்படும் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்வதற்கு முன்னோட்டமாக அமைந்தது. நிகழ்ச்சியை அறிவியல் பட்டதாரி ஆசிரியை ராபியாபஸ்ரி ஏற்பாடு செய்திருந்தார்.

மாணவர்களுடைய படைப்புகளை ஊக்குமளிக்கும் வகையில் ஷகிலா பானு,ரொகையா பீவி, கிருஷ்ணவேணி ஜோதிமணி, உஷாராணி, கதிரேசன்,ஷஃபான் தஸ்லிம் ஆகியோர் படைப்புகளுக்கு வழிகாட்டி ஆசிரியர்களாகச் செயல்பட்டனர்.

மகிழ்முற்ற செயலாளர் சகாய வில்சன்  நன்றி கூறினார்.மாணவர்களின் அறிவியல் படைப்புகளை அனைவரும் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts