“இயல்-இசை-நாடகம்” தொடர் நிகழ்ச்சி:
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம், கலை பண்பாட்டு மையம், அரசு இசைப்பள்ளி மற்றும் ஷண்முகா நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்தும் “இயல்-இசை-நாடகம்” தொடர் நிகழ்ச்சியின் முதல் நாள் நாடக நிகழ்வு மார்ச் 10, 2025 அன்று வெகுவிமர்சையாக தொடங்கியது.

நிகழ்ச்சி மாலை 4:15 மணிக்கு துவங்கியது. நிர்வாகி திருமதி ந. சித்ரா வரவேற்புரை ஆற்றினார்.
தலைமை ஆசிரியர் திருமதி ஜெயபாக்கியம் ஆண்டறிக்கை வாசித்தார்.
ஸ்ரீரங்கம் மருத்துவர் பவித்ரா வயலின் இசை வாசித்து நிகழ்ச்சி தொடக்கத்தை சிறப்பித்தார்.
வட்டாரக் கல்வி அலுவலர், அந்தநல்லூர் சரகம் கா. மருதநாயகம் நாடகக் கலையின் முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினார்
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் ஜெயந்தி, மேலூர் பட்டதாரி ஆசிரியர் சோமு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
குழந்தைகள் கண்ணகி, வள்ளலார், அன்னை தெரசா, உண்மை ஒளி போன்ற நாடகங்களை அரங்கேற்றினர்.

மாணவிகள் சுகப்பிரியா, ஸ்ரீ பவானி, பூர்விகா ஸ்ரீ, ராகவி ஆகியோர் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினர்.
ஆசிரியை திருமதி.ஜெயந்தி குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தார்.
திருமதி. ஆனந்தவள்ளி நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை
எஸ். சிவகுமார் (முன்னாள் முதல்வர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காஞ்சிபுரம்) சிறப்பாக செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றலை அதிகரிக்க செய்வது மட்டுமல்லாமல், கலாச்சார விழிப்புணர்வையும் பெருக்கும் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.















