• Home
  • தமிழ்நாடு
  • பெண்களுக்கு “பாரதி கண்ட புதுமைப் பெண் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழ்நாடு

பெண்களுக்கு “பாரதி கண்ட புதுமைப் பெண் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Email :134

சர்வதேச மகளிர் தின விழா அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழகம்; நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஸ்ரீதேவி ஹெல்த் கேர் இணைந்து நிகழ்த்திய சர்வதேச மகளிர் தின விழா திருச்சி அருண் ஹோட்டல் வசந்தம் ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூகத்தில்  தொண்டுகள் மற்றும் சிறுதொழில்கள் செய்து சிறப்பாக பணியாற்றி வருகிற பெண்களுக்கு
“பாரதி கண்ட புதுமைப் பெண் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக் கழக மகளிர்துறைத்தலைவர் பேராசிரியர்
முருகேஸ்வரி திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கி வருகிற வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மதி சிறகுகள் மையம் பொறுப்பாளர் கவிதா தண்டாயுதபாணி,
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் திரு சிவசங்கர் சேகரன் சிநேகம் டிரஸ்ட் திரு பால்குணா லோகநாத் இந்தியன் ரெட்கிராஸ் திருச்சி மேலாளர் எழில் ஏழுமலை சமூக செயற்பாட்டாளர் பாண்டியன்  சமூக செயற்பாட்டாளர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மகளிர் தின விழா உரையாற்றினர் விழா நிகழ்சிகளை வழக்கறிஞர் ஜானகிசங்கர் தொகுத்து வழங்கினார். நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு இயக்கம் தேசிய தலைவர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றினார்.

பாரதி கண்ட புதுமைப்பெண் விருது மகளிர் உரிமை காக்கும் சமூகப்பணியில் தொடர்ந்து பணியாற்றி வரும் சாதனை பெண்மணி ஆசிரியர் சுபா அவர்களுக்கு வழங்கினார். அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழகத்தின் நிறுவனர் தலைவர் திரு ஆ.ஜெயராமன் அவர்கள் மற்றும் தேசிய கௌரவ தலைவர் மாண்புமிகு மேனாள் நீதியரசர் ஆ.கற்பக விநாயகம் அவர்கள் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையின் பேரில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி அமைப்பின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர்.சுவேந்திரன் அவர்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்து வந்திருந்த அனைவருக்கும் விருந்து செய்து உபசரித்தார். கூட்டத்தில் பல சமூக அமைப்புகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts