அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் 2025 ஆம் ஆண்டுக்கான திருவிழா கொடி ஏற்றதுடன் 09/03/2025 நேற்று சிறப்பாக தொடங்கியது.

இதில் வழக்கம் போல திருவனைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரின் நாட்டு நலப்பணி திட்ட தன்னரவல மாணவ மாணவிகள் ஞாயிற்றுககிழமை காலை 09 மணி முதல் 50 பேர் இருபால் அலுவலர்களுடனும் ஞாயிற்றுககிழமை இரவு 09 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 06 மணி வரை நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ஆ.அருண்பிரகாஷ் தலைமையில் 43 மாணவர்கள் பக்தர்கள் கூட்டத்தை

நெறிப்படுத்துதல், குடிநீர் வழங்குதுதல், பக்தர்களுக்கு தேவையான முதல் உதவி மற்றும் வழிகாட்டுதல் போன்ற சேவைகளை முறையாக திருக்கோவில் நிறுவகத்தின் வழிக்கட்டுதல்படி சிறப்பாக செய்தனர் இதனை பக்தர்கள் பலரும் பாராட்டிச் சென்றனர்.













