மானிய நடுநிலைப்பள்ளி, வெங்கடாசலபுரம் உப்பிலியாபுரம் ஒன்றியம், சுய கற்றல் மையத்தின் சிறப்பு!
பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.ரவிச்சந்திரன் குழந்தைகள் வசிக்கும் தெருவில் சுய கற்றல் மையங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். குழந்தைகள் பெற்றோர் உதவியுடன் படித்து வருகிறார்கள் சில இடங்களில் குழுவாக படித்து வருகிறார்கள் திருமதி.சுகன்யா தன்னார்வலர்கள் குழந்தைக்கு உதவி வருகிறார்கள். மையம் தொடங்குவதற்கு முன் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள் சுய கற்றல் மையம் வாயிலாக தாங்கள் படிப்பதோடு தங்கள் தெருவில் உள்ள பிற குழந்தைகளையும் படிக்க வைப்போம் என அனைத்து குழந்தைகளும் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள் தினந்தோறும். பிறகு படிக்க தொடங்குவார்கள். தொடக்கத்தில் தாமதமாக வந்த குழந்தைகள் நாளாக நாளாக குறித்த நேரத்தில் வர தொடங்கினார்கள் விடுமுறை காலங்களிலும் படிப்பார்கள் தற்போது சுயமாக கற்கும் முறை நல்ல பலனை தந்துள்ளது.
மாணவர்களின் திறனை வளர்க்கும் சுய கற்றல் மையம்:
எஸ். சிவக்குமார், முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்.
உப்பிலியாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மானிய நடுநிலைப்பள்ளி, வெங்கடாசலபுரம் மூலம், சுய கற்றல் மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஆர். ரவிச்சந்திரன் தலைமையில், குழந்தைகள் தங்களது வசிக்கும் தெருவில் சுய கற்றல் மையங்களை உருவாக்கி படிக்கும் பணியில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர்.
பெற்றோர் மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு:
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் படித்து வருகின்றனர். சிறப்பாக, திருமதி. சுகன்யா உள்ளிட்ட தன்னார்வலர்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறார்கள். சில இடங்களில் குழுவாக கூடி பயிலும் முறையும் செயல்படுகிறது.
உறுதிமொழியுடன் துவங்கும் கற்றல்:
சுய கற்றல் மையம் தொடங்கும் முன், மாணவர்கள் உறுதிமொழி எடுக்கின்றனர்.
” நான் சுயமாக படிப்பதோடு மட்டும் அல்லாமல், எங்கள் தெருவில் உள்ள பிற குழந்தைகளையும் படிக்க வைப்பேன் ” என உறுதி கூறுகிறேன்.
சுய கற்றல் மைய மூலம், தொடர்ந்து படிப்பதற்கான பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுகின்றனர்.
நேரத்தை மதிக்கும் மாற்றம்:
தொடக்க காலத்தில் சில மாணவர்கள் தாமதமாக வருவது இருந்தாலும், இப்போது நேரத்திற்கு ஏற்றவாறு மையத்திற்கு வந்து பயில ஆரம்பித்துள்ளனர். மேலும், விடுமுறை நாட்களிலும் இந்த கற்றல் மையத்தில் மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் ஈடுபடுகின்றனர்.
சிறப்பான பயன்கள்:
சுய கற்றல் மையம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, பயிற்சி, தனித்திறன் ஆகியவற்றை வளர்த்திருக்கிறது. மாணவர்கள் சுயமாக கற்கும் பழக்கத்தை , பின்பற்றுவதால் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.













