“இணைந்து கற்றல் கல்வி முறை” – முன்னோடி முயற்சி!


திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கம்பரசம்பேட்டை காலனியில் “இணைந்து கல்வி கற்றல் முறை” என்ற புதிய திட்டம் செயல்பாட்டில் வந்துள்ளது.
இந்த திட்டம், முன்னாள் DIET முதல்வர் சி. சிவகுமாரின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது.
குழந்தைகள் விடுமுறை நாட்களில் பாடங்களை மறந்து விடுவது, மீண்டும் படிக்க சிரமமாக இருப்பதைத் தீர்க்கும் நோக்கில், பெற்றோர் உதவியோடு குழந்தைகள் வீட்டிலேயே படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
வீடுகளில் கரும்பலகை அமைத்து, குழந்தைகள் பெற்றோர் முன் பாடங்களைப் படித்து விளக்கம் கூறுகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் – தாத்தா, பாட்டி உள்ளிட்டோர் – இதில் பங்கு கொள்கின்றனர்.
வாரத்தில் ஒரு நாள் தெருவில் குழு கற்றல் நிகழ்கிறது. வீதி நூலகங்கள், வாட்ஸ்அப் குழு கண்காணிப்பு, கதைகள், கேள்விகள், ஓவியங்கள், பாடல்கள், விளையாட்டுகள் என பல வகைச் செயல்பாடுகள் இடம்பெறுகின்றன.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் மீனா, கல்வி அலுவலர்கள் மருதநாயகம், ஸ்டான்லி ராஜசேகர், சமூக ஆர்வலர் நாகவேணு மற்றும் ஸ்வேதா உள்ளிட்டோர் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பள்ளி தலைமையாசிரியர் சுகுமார் வரவேற்று, ஆசிரியை அனுராதா நன்றி தெரிவித்தார்.











