செயின்ட் ஜோசப் கல்லூரியில் மன்றங்களின் நிறைவு விழா & சாதனையாளர்கள் விழா!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மார்ச் 14 அன்று அனைத்து துறைகளின் மன்ற செயல்பாடுகளின் நிறைவு விழாவும் இக்கல்வி ஆண்டில் சாதனை புரிந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் அருள்முனைவர் அருள் ஒளி, சே.ச. வரவேற்புரையாற்றினார். கல்லூரி அதிபர் முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமையுரைத் தொடர்ந்து, கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி மரியதாஸ், சே.ச., இணை முதல்வர் முனைவர் குமார் ஆகியோர் பங்கேற்று சாதனையாளர்களை வாழ்த்திப் பாராட்டி உரையாற்றினார். ஆசிரியர் சங்கத்தலைவர் முனைவர் டாமினிக் ஆசிரியரல்லாப் பணியாளர் சங்கத் தலைவர் முனைவர் சேவியர் இளங்கோ ஜோதி மாணவர் பேரவைத் தலைவர் ஆசிக் டோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், துணைவேந்தர் குழு உறுப்பினருமான நுண்உயிரியல் துறைப் பேராசிரியர் முனைவர் வேலு ராஜேஷ் கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையில் 200 ஆண்டுகளை நோக்கி கல்விப் பணியில் பயணம் செய்கிற இக்கல்லூரியில் எண்ணற்ற வாய்ப்புகள் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன என்பதை நான் அறிவேன். அதை வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்திய மாணவர்களும் பேராசிரியர்களும் பாராட்டப்படுகிற நிகழ்வில் நான் பங்கேற்று சிறப்புரை பெருமைக்குரிய செயல் என்பதைப் பதிவு செய்து தன்னுடைய அனுபவங்களைப் பதிவு செய்து உரையாற்றினார்.
கல்லூரியில் செயல்படக்கூடிய அனைத்து துறை மன்றங்களின் ஓராண்டுச் செயல்பாட்டு அறிக்கை காட்சி வெளிப்பாட்டு அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்டன.

நூலாசிரியர்கள், காப்புரிமை பெற்றவர்கள், அகலகங்களுக்கு கல்விச் செயல்பாட்டிற்காகப் பயணம் செய்துள்ளவர்கள், புதிதாக முனைவர் பட்டம் பெற்றுள்ளவர்கள், 100 சதவீத வருகைப்பதிவு எனப் பல்வேறு வகைப்பாடுகளின் கீழ் பேராசிரியர்களும், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், விளையாட்டு துறை மற்றும் கலைத்துறைகளில் பல்வேறு சாதனை புரிந்த மாணவ மாணவியரும் விழாவில் பாராட்டப்பட்டனர்.
சிறந்த பேராசிரியர் விருது, நட்சத்திர விருது ஆகியனவும் வழங்கப்பட்டன. நிறைவில் பேராசிரியர் நன்றியுரை ஆற்றினார். விழா நிகழ்வுகளை பேராசிரியர்கள் சி.ஷகிலா பானு, முனைவர் பிரசாந்த் ஆரோக்கியசாமி ஆகியோர் தொகுத்து வழங்கினார்.

அருள் தந்தையர்கள், தேர்வு நெறியாளர், அகத்திர உறுதிப்பிரிவு இயக்குனர்கள், புல முதன்மையர்கள், துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், துறை ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள், மாணவ மாணவியர் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.














