• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரியில் அதிபர் தினக் கொண்டாட்டம்!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரியில் அதிபர் தினக் கொண்டாட்டம்!

Email :31

செயின்ட் ஜோசப் கல்லூரியில் அதிபர் தினக் கொண்டாட்டம்!

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் அதிபர் தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. கடந்த மூன்று ஆண்டுகளாக கல்லூரியை திறம்பட நடத்தி வருகிறார். அவரையும் அவர் சார்ந்த இயேசு சபை குடும்பத்தையும் பாராட்டும் விதமாக கல்லூரிப் பாரம்பரியத்தின் அடிப்படையில் அதிபர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  கல்லூரி அதிபர் மற்றும் அருள்தந்தையர்களை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்று அணிவகுத்து அரங்கிற்கு அழைத்து வந்தனர்.

கல்லூரி  கல்லூரி அதிபர்  இயேசு சபைக் குழுமத்தோடு இணைந்து சிறப்பாக முன்னெடுக்கிற அரிய பணிகளை மேற்கோள்காட்டி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. வரவேற்புரையாற்றினார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச.  வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் சங்கத்தலைவர் முனைவர் டோமினிக், ஆசிரியரல்லாப் பணியாளர் சங்கத் தலைவர் சேவியர் இளங்கோ, மாணவப் பேரவை தலைவர் ச.ஆசிக் டோனி ஐயோ முன்னிலை வகித்தனர்.

தேர்வு நெறியாளர் முனைவர் கு.அலெக்ஸ், ஆசிரியரல்லாச் சங்க பிரதிநிதி முனைவர் ஆரோக்கியசாமி, மாணவர் பேரவை தலைவர் ச.ஆசிக் டோனி ஆகியோர்  அதிபர் தந்தையின் முன்னோக்குச் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்து பாராட்டுரை வழங்கினர்.

அருள்தந்தை பவுல்ராஜ் மைக்கேல் தம் ஏற்புரையில், வரலாற்றுச் சிறப்புமிக்க வளனார் கல்லூரியில் தற்போது பல்வேறு சாதனைகள் நிகழ்ந்து கொண்டிருப்பதை எண்ணி தன்னுடைய மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் பதிவு செய்தார். மேலும்  இந்தத் தொடர் வெற்றிகளுக்கும் முன்னோக்குச் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக அமைந்திருக்கிற மதுரை மறை மாநில இயேசு சபை, தூய வளனார் கல்லூரி இயேசுசபைக் குழுமம், கல்லூரியின் மேலாண்மையினர், பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட செய்கின்ற பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கம், ஆசிரியர் அல்லா சங்கம், மாணவர் பேரவை, துறைத் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியப் பெருமக்கள், மாணவர்கள் என அனைவரின் பணிகளையும் நினைவூட்டி நமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பதிவு செய்தார்.

அதிபர் தின விழாவை ஒட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. நிறைவில் இணை முதல்வர் முனைவர் த‌.குமார் நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts