உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு, திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றமும் இணைந்து விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர்.
மார்ச் 22 உலக தண்ணீர் தினம் ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகம் முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை Water and Gender தண்ணீரும் பாலினமும் என்கின்ற தலைப்பை வழங்கியிருக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் தண்ணீர் பாதுகாப்பு தண்ணீர் சேமிப்பு, தண்ணீரின் அவசியம் தண்ணீரின் பயன்பாடு நீர்நிலைகளை பாதுகாப்பது நீர்நிலைகளை பராமரிப்பது நீர்நிலைகளை மேம்படுத்துவது நீர் நிலைகளை திறந்தவெளி குப்பைத் தொட்டியாக மாற்றாமல் தடுப்பது, நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பை தடுப்பது, நீர்நிலைகளின் அளவுகளை குறைக்காமல் பாதுகாப்பது நன்னீர் ஏரிகளை பாதுகாத்து பறவைகள் விலங்குகள் உயிர்கள் நுண்ணுயிர்கள் யாவற்றையும் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வும்,
நாம் பணிபுரியும் இடங்களில் வீடுகளில் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துவது, தண்ணீர் வீணாகாமல் தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட உறுதிமொழிகள் மாணவர்களால் ஏற்கப்பட்டது விழிப்புணர்வு வாசகப் பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி உறுதிமொழி எடுத்தனர்.
இந்நிகழ்விற்கு தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே. சி நீலமேகம் தலைமை வகித்தார். தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ் குமார் உறுதிமொழி வாசித்து நிகழ்வை ஒருங்கிணைத்தார் .அமைப்பின் துணைச் செயலாளர் ஆர்.கே.ராஜா,ஆகாஷ், ஆனந்த், குமரன் உள்ளிட்ட 50 ற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.














