• Home
  • தமிழ்நாடு
  • திருச்சியில்  பொன்மலை ரயில்வே இடங்களில் மரக்கன்று நட்டு வளர்த்து வருகிறோம்.
தமிழ்நாடு

திருச்சியில்  பொன்மலை ரயில்வே இடங்களில் மரக்கன்று நட்டு வளர்த்து வருகிறோம்.

Email :26

பொன்மலை பகுதியில் 3ஆண்டு வளர்ந்த மரக்கன்று சேதம் –மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு கண்டனம்.
திருச்சியில்  பொன்மலை ரயில்வே இடங்களில் மரக்கன்று நட்டு வளர்த்து வருகிறோம்.
செவ்வாய்கிழமை  இரண்டு வளர்ந்த மரங்களுக்கு இடையில் புதிய மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக வளர்ந்து வந்த மரக்கன்றுகளும் பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இன்று (29.07.2026) காலை அப்பகுதியில் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவிற்கு வந்த சிலரால், மூன்று ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட ஒரு மரக்கன்று உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் வேதனையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

ஒரு மரத்தை வளர்க்க பல ஆண்டுகள் உழைப்பும் பராமரிப்பும் தேவைப்படும் நிலையில், சில நொடிகளில் அதை சேதப்படுத்துவது இயற்கைக்கும் சமூகப் பொறுப்புக்கும் எதிரான செயலாகும் என்று மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில், மரக்கன்றுகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவும், பொதுமக்கள் இயற்கை வளங்களை தங்களது சொத்தாகக் கருதி பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  
இது போல பல இடங்களில் மரங்களின் அருமை தெரியமால் சில குடிமக்கள், தனது சுயநலத்திற்காக மரங்களை வெட்டுகிறார்கள். அடுத்த தலைமுறையிற்கு நமது பூமியை நல்லமுறையில் கொடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts