தமிழ்நாடு தினத்தில் செயின்ட் ஜோசப் கல்லூரி காட்சித் தொடர்பியல் தொழில்நுட்பத் துறையில் ‘விஸ்காம் டெக் கிளப்’ தொடக்கவிழா!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி காட்சித் தொடர்பியல் தொழில்நுட்பத் துறை சார்பில் ‘விஸ்காம் டெக் கிளப்’ தொடக்க விழா, பேராசிரியர் அருள்முனைவர் சேவியர் ஆண்டனி, சே.ச. எழுதிய செல் திரை அடிமைத்தனம்மற்றும் போதைப்பொருள் அடிமைத்தனம்ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம், சே.ச. தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நியூஸ் 7 தொலைக்காட்சி துணை ஆசிரியர் திரு. பாலவேல் சக்கரவர்த்தி பங்கேற்று, செய்தி ஊடகங்களின் பொறுப்புணர்வு, ஊடக நெறிமுறைகள் மற்றும் சுய ஒழுங்குமுறைகளின் அவசியம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்
தொடர்ந்து, தமிழ்நாடு தினம் விழா நடைபெற்றது.

இதில் சென்னை மாற்று ஊடக மையத்தின் இயக்குநர் முனைவர் இரா.காளீஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழின் வரலாற்று சிறப்புகளையும் பெருமையயும் மாணவர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உரையாற்றினார்.
காட்சி தொடர்பியல் தொழில்நுட்பத் துறையின் மாணவர் சங்க தலைவர், செயலர், துணை செயலர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணியேயேற்பு விழா நடைபெற்றது. மேலும் மாணவர்களின் கலை நிகழ்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியினை காட்சி தொடர்பியல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் முனைவர் தமிழரசி அவர்கள் ஒருங்கிணைத்தார்.












