ஹிரோஷிமா தினம் – பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பில், ஹிரோஷிமா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (06.08.2026) மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜமால் முகமது கல்லூரி கணிதத்துறை உதவிப் பேராசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருச்சி மாவட்ட அறிவியல் பிரச்சார உபகுழு ஒருங்கிணைப்பாளருமான பேரா.ரிபாயத் அலி அவர்கள் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலின் விளைவுகள், அமைதி, மனிதநேயம் மற்றும் அணு ஆயுதமற்ற உலகின் அவசியம் குறித்து மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை, அறிவியல் மன்றப் பொறுப்பாசிரியர் மற்றும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் உலக அமைதியை வலியுறுத்தி, அறிவியல் மனிதநலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.














