திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை – செப்பர்டு
அருப்பே சுகாலயம் போதை நோய் சிகிச்சை மையம் மற்றும் இனாம்குளத்தூர் ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து போதை தடுப்பு மற்றும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் பள்ளி மாணாக்கர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் வழிகாட்டுதலின்படி விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச வலிமையான இளைஞர்கள் கொண்ட இந்தியாவில் இப்போதை பழக்கத்தின் மூலம் எதிர்கால இந்திய வலிமையற்றதாய் மாறி விடும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் உடல் மனநலம் பாதிக்காமல் நல்லதொரு மாணவ சமூதாயம் உருவாவதன் மூலம் அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமையும் என்றும் தங்களுடைய திறன்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என தனது தொடக்கவுரையில் கூறினார்.

அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி இக்கருத்தருங்கின் மூலம் மருத்துவ ரீதியான போதை பழக்கத்தின் விளைவுகள் மற்றும் தீமைகள் குறித்த கருத்துகளை பெற்று தங்களையும் சமூகத்தையும் போதையில்லாத சமூகமாக உருவாக்க முனைவோம் என்று தனது தலைமை உரையில் கூறினார்
அருப்பே சுகாலய போதை நோய் சிகிச்சை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் பள்ளி பருவ மாணவர்கள் இப்போதை பழக்கத்தை மேற்கொண்டால் தங்களது நினைவு திறனை இழக்க நேரிடும் இதன் மூலம் கல்வி நட்பு உறவு சமூகம் என அனைத்தையும் இழந்து நம் வாழ்வு அர்த்தமற்றதாக மாறிவிடும் இதிலிருந்து காத்துக்கொள்ள கவனமாக செயல் பட வேண்டும் என்று விளக்கவுரையாற்றினார்.

ஹரிஷ் ராஜா மற்றும் கிளின்டன் ஜோ ஆகியயோர் தங்களது அனுபவத்திலிருந்து இப்போதை நோய்க்கு அடிமையானதையும் அதனால் பல பாதிப்புகளுக்கு உள்ளானதையும் பற்றியும் இதன் மூலம் தங்களின் குடும்பம் சமூகம் உறவுகளின் நன்மதிப்புகளை இழந்து பின்னர் அருப்பே சுகாலயம் மூலம் மீண்டு வந்ததை விளக்கிக்கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வேதியல் ஆசிரியர் எடிசன் உறுதி மொழி வாசிக்க மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் போதைக்கு எதிரான உறுதி மொழி ஏற்றனர்.
விரிவாக்கத்துறை முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் வந்தவர்களை வரவேற்றார் முடிவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரெங்கநாயகி நன்றி கூறினார் இந்நிகழ்ச்சியை கல்லூரி மாணவி ஸ்ரீநிதி தொகுத்து வழங்கினார்.

மூன்றாம் ஆண்டு இளங்லை செயற்கை நுண்ணறிவுத் துறை மாணாக்கர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள் 627 பள்ளி மாணாக்கர்கள் 31 ஆசிரியர்கள் 5 அலுவலக பணியாளார்கள் கலந்து கொண்டு வழிப்புணர்வு பெற்றனர்.
இக்கருத்தரங்கில் போதை பற்றிய வழிப்புணர்வு குறும்படம் மற்றும் விளைவுகள் குறித்த காணொளிக்காட்சி மாணாக்கர்களுக்கு காண்பிக்கப்பட்டது.












