“மாவீரன் போல” பாடல் வெளியீட்டு விழா – திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது.
திருச்சியில், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பயின்ற பாடகர் ஆகாஷ் எழுதிய “மாவீரன் போல” என்ற புதிய பாடலின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு கலைக்காவிரி பேராசிரியர் முனைவர் கி.சதீஸ்குமார் தலைமை வகித்தார். மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், சமூக ஆர்வலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மாவட்ட நகைச்சுவை மன்ற செயலாளர் சிவகுருநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “மாவீரன் போல” பாடலை வெளியிட்டு, திருச்சியில் இது போன்ற இளையோர்கள் கலைத்துறையில் படைப்பாற்றலுடன் உருவாகி வருவது பெருமைக்கும் பாராட்டிற்கும் உரியது இவர்களை வரவேற்று வளர்த்தெடுத்தல் நமது கடமை என்றார் சிவகுருநாதன்.
பாடலி

ன் வரிகளை ஆகாஷ் எழுதியுள்ளார். பாடலுக்கு ஆண்ட்ரவின் ஸ்டாரி இசையமைத்துள்ளார். பாடலை திரைப்படப் பின்னணி பாடகர் ஹரிச்சரன் பாடியுள்ளார். மேலும் E-Sharp The Band பாடகர் ஜெயபாரதி உள்ளிட்ட கலைஞர்களின் பங்களிப்பும் இடம்பெற்றுள்ளது.
விழாவில் பாடல் உருவாக்கத்தில் பங்களித்த கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், கலைக்காவிரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு பாடல் குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
“மாவீரன் போல” பாடல் இளைஞர்களின் திறமை, இசை ஆர்வம் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது என விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.














