மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம்!
கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் அரங்கில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மாநிலத் தலைவர் மருத்துவர் த.ராசலிங்கம் தலைமை வகித் தார். மக்கள் சக்தி இயக்க மாநில பொதுச் செயலாளர் லெ.பாஸ்கரன், மாநில பொரு ளாளர் கே.சி.நீலமேகம், பெரம் பலூர் துணைத் தலைவர்கள் பெரியசாமி, அசோகன், மாநில துணைச் செயலாளர்கள் ரா.இளங்கோ, கரூர் மாவட்டச் செயலாளர் வை.க.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமூக நலன், தனி மனித முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு, மருத்துவச் சேவை, சமூக ஈடுபாடு உள்ளிட்ட துறை களில் சிறப்பாக பங்களித்து வரும் 6 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, திருவள்ளுவர் விருது கண் மருத்துவர் ரமேஷ், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி விருது மக்கள் சக்தி இயக்க மாநில துணைச் செயலாளர் ரா.இளங்கோ, பேராசிரியர் சண்முகம் விருது மக்கள் சக்தி இயக்க கரூர் மாவட்டச் செயலா ளர் வை.க.முருகேசன், சுய பொருளாதார மேம்பாட்டு விருது கரூர் ப.மணிவேல், சமூக ஈடுபாடு விருது அன்பே சிவம் அறக்கட்டளை ச.பாக்கியராஜ், சுய வளர்ச்சி விருது தனலட்சுமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கூட்டத்தில், போதை ஒழிப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தி, போதிய ஆசிரியர்களை நிய மித்து தரமான கல்வி வழங்கப் படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். போக்குவரத்து விதி களை மீறும் வாகனங்களை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.













