செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை – செப்பர்டு சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நம் பங்கு – விழிப்புணர்வுக்கான போட்டிகள் “பருவநிலை மாற்றம்: எல் நினோவும் விளைவுகளும்” செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை – செப்பர்டு சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நம் பங்கு – விழிப்புணர்வுக்கான போட்டிகள் “பருவநிலை மாற்றம்: எல் நினைவும் விளைவுகளும்” என்ற மையக்கருத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் அளுந்தூர் புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியின் வழியாக மாணவர்களிடையே பருவநிலை மாற்றம், எல் நினோ நிகழ்வு மற்றும் அதன் தாக்கங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அளுந்தூர் புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பள்ளித் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்சகோதரர் ரமேஷ் அமலநாதன் தலைமையில் விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ், சே.ச., தொடக்கவுரை ஆற்றினார்.
செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் கணினி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அற்புத சகாய ராஜ் கருத்துரை வழங்கினார்.


பணிமுறை இரண்டின் இளங்கலை வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவன் செல்வன் ஹரிபிரசாத் வந்தவர்களை வரவேற்றார் முடிவில் புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் வேளாங்கண்ணி நன்றி கூறினார்.



இந்நிகழ்வின் சிறப்பம்சமாக மரக்கன்றுகள் நடப்பட்டன மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டன மாணாக்கர்களின்; சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கும் கலந்து கொண்ட மாணாக்கர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன எல் நினோ பற்றிய ஒலி ஒளி காட்சிகள் காட்டப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணாக்கர்களும் ஆசிரியர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வையும், நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) சார்ந்த செயல்பாடுகளில் அவர்களின் பங்களிப்பையும் மேம்படுத்தும் நோக்கமாக இந்நிகழ்ச்சி அமைந்தது குறிப்பாக, காலநிலை நடவடிக்கை, பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி நீர்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல், நிலவாழ் உயிரினங்கள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்




போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த இலக்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பணிமுறை இரண்டின் மூன்றாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் துறை சி பிரிவு மாணாக்கார்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.














