ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி, ஐஐடிஎம் பிரவர்தக், ராக் (RAAC) மற்றும் கோவை குளங்கள் அமைப்பு இணைந்து செயல்படுத்தும் “அரங்கன் திருமஞ்சன காவிரி” திட்டம் இன்று வெற்றிகரமாக துவக்கப்பட்டது.
இந்நிகழ்வு இன்று காலை 7.30 மணிக்கு தன்னார்வலர்கள் பதிவுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மூலத்தோப்பு பகுதியில் உள்ள திருமஞ்சன காவிரி கரையில் 1.5 மணி நேர தூய்மைப் பணி நடைபெற்றது. இதில் கோவை மற்றும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும்


பேராசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட இந்த தூய்மைப் பணியின் போது சுமார் 1,500 கிலோ கழிவுகள் சேகரிக்கப்பட்டன.

சேகரிக்கப்பட்ட கழிவுகள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மூன்று வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டன.

இந்நிகழ்விற்கு சமூகப்பணித் துறை, நாட்டு நலப்பணித் திட்டம் (NSS), எக்ஸ்னோரா (EXNORA) மற்றும் ரோட்டராக்ட் சங்கங்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கின. இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
















