திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குழந்தை தூதுவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி! திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ‘பெண் குழந்தை தூதுவர்’ (Girl Child Ambassador) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (15.10.2026) காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி A. விஜயலட்சுமி தலைமையுரையாற்றினார்.


பெண் குழந்தைகளைக் காப்பதும், அவர்களுக்குக் கல்வி அளிப்பதும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.


பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலினப் பாகுபாடு, குழந்தைத் திருமணம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளைத் தடுப்பது, பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பது,


அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் தன்னம்பிக்கையுடன் வளர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், பெண் குழந்தைகள் தங்களது உரிமைகளை அறிந்துகொண்டு, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்

தூதுவர்களாகச் செயல்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.


“பெண் குழந்தைகளைக் காப்போம்! பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்!” என்ற நோக்கத்தை முன்னிறுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சி,

பெண் குழந்தைகளின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.














