• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், மாணவர்களின் சமூக சார்பில், மாணவர்களின் சமூக விழிப்புணர்வு, தனிநபர் வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் “TALK/EXCHANGE SERIES” நிகழ்ச்சி 14.11.2026 இன்று பிற்பகல் திருச்சி பிராட்டியூர் –அல்லித்துறை சாலையில் உள்ள ஹால்மார்க் பிசினஸ் ஸ்கூலில் நடைபெற்றது.
தமிழ்நாடு

திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், மாணவர்களின் சமூக சார்பில், மாணவர்களின் சமூக விழிப்புணர்வு, தனிநபர் வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் “TALK/EXCHANGE SERIES” நிகழ்ச்சி 14.11.2026 இன்று பிற்பகல் திருச்சி பிராட்டியூர் –அல்லித்துறை சாலையில் உள்ள ஹால்மார்க் பிசினஸ் ஸ்கூலில் நடைபெற்றது.

Email :64

திருச்சியில் ஹால்மார்க் பிசினஸ் ஸ்கூலில் TALK/EXCHANGE SERIES நிகழ்ச்சி!
திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், மாணவர்களின் சமூக விழிப்புணர்வு, தனிநபர் வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் “TALK/EXCHANGE SERIES” நிகழ்ச்சி 14.11.2026 இன்று பிற்பகல் 2.30 மணியளவில்

திருச்சி பிராட்டியூர் – அல்லித்துறை சாலையில் உள்ள ஹால்மார்க் பிசினஸ் ஸ்கூலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஹால்மார்க் பிசினஸ் ஸ்கூல் இயக்குநர் டாக்டர் P. அரங்கநாதன் வரவேற்புரை வழங்கினார். திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி A. விஜயலட்சுமி தலைமை உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் சரணாலயம் முதியோர் இல்லம், புங்கனூர், திருச்சியைச் சேர்ந்த திருமதி P. ஈஸ்வரி மற்றும் திரு. S. சிவா ஆகியோர் சிறப்பு வள நபர்களாகக் கலந்து கொண்டு, தங்களது அனுபவங்கள் மற்றும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மேலும், மாணவர்களுடன் கலந்துரையாடி பல்வேறு சமூக நலன் சார்ந்த கருத்துகளையும் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றனர். இத்தகைய கலந்துரையாடல்

நிகழ்ச்சிகள் மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வு, சிந்தனைத் திறன் மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டது.
நிறைவாக, திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி B. அனந்தி நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஹால்மார்க் பிசினஸ் ஸ்கூல் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts