இன்று திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 59 வது தேசிய நூலக வார விழாவின் ஒரு பகுதியாக நூலக புதிய உறுப்பினர் சேர்க்கைகாக திருவானைக்காவல் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் 150 பேரை உறுப்பினராக சேர்க்க ஒருவருக்கு ரூபாய் 30 வீதம் 150 பேரை புதிய உறுப்பினராக சேர்க்க இனிய நண்பரும் பொருளாதார ஆலோசகருமான *திரு.B.ஸ்ரீதரன்* மற்றும் தனிக்கையாளர் *திருமதி.சுபப்ரதா* இணையர் அவர்களும் உறுப்பினராக சேர்ந்து ரூபாய் 4500 நன்கொடையும் வழங்கினார்கள். அவர்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
மேலும் நமது நூலகத்திற்கு வரும் CA தேர்வுக்கு தயாராகும் மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கவும் *திருமதி.சுபப்ரதா ஸ்ரீதரன்* சம்மதித்தார்கள். இந்த வாரத்தில் நூலக வளாகத்தில் வகுப்புகள் துவக்கி நடத்தி தர சம்மதித்தார்கள். அவர்கள் சேவைகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் நன்றிகள். CA தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் நமது திருவானைக்காவல் நூலகத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும் விபரங்களுக்கு : 7200743303 / +91 94421 27146
வி.வே.விஸ்வேஸ்வரன், திருவானைக்காவல்













