கட்டுரை போட்டி, திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம், சார்பில் நடத்தப்படும் 59 வது தேசிய நூலக வார விழாவின் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
திருவானைக்காவல் மேலகொண்டயம்பேட்டை *நேருஜி நடுநிலைப் பள்ளியில்* 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் இன்று ” *எனக்கு பிடித்த இந்தியாவின் மறைந்த அரசியல் தலைவரும் அவரால் கொண்டுவரப்பட்ட மக்கள் நல திட்டங்களும்* ” எனும் தலைப்பில் கட்டுரை எழுதினார்கள். வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு சனிக்கிழமை கிளை நூலகத்தில் சிறப்பு விருந்தினர்கள் மூலம் பரிசு வழங்கி சிறப்பிக்க படுவார்கள். சிறப்பான முறையில் பள்ளி வளாகத்தில் போட்டி நடத்திய தலைமையாசிரியர் *திருமதி.சிவகுமாரி* அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
மேலும் நாளை திருவானைக்காவல் பகுதி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் சன்னதி வீதி உயர்நிலைப் பள்ளிகளில் அதே தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.
*வி.வே.விஸ்வேஸ்வரன், திருவானைக்காவல்*













