*திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம்* சார்பில் கொண்டாடப்பட்ட 59 வது தேசிய நூலக வார விழாவின் இறுதி நிகழ்ச்சி இன்று 21.11.2026 மாலை நமது நூலக வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
எனது வரவேற்புரையுடன் தவங்கிய நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் *முனைவர்.சுப்ரமணியன்* அவர்கள் தலைமை தாங்கினார்.

ஓய்வுபெற்ற வேளாண்மைத் துறை அதிகாரி *திரு.சங்கரன்* அவர்கள் முன்னிலை வகித்தார். இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி பேராசிரியர் *முனைவர்.கனிமொழி* அவர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு கல்வி/ நல்லொழுக்கம்/ புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றிய வழிகாட்டுதல்கள் வழங்கி சிறப்பான முறையில் உரையாற்றி சிறப்பித்தார். அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

பரிசளிப்பு நிகழ்ச்சி: திருவானைக்காவல் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி / உயர்நிலைப் பள்ளி சன்னதி வீதி, திருவானைக்காவல் மற்றும் நேருஜி நினைவு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி என மூன்று பள்ளிகளில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கிளை நூலகர் *திருமதி.அ.விஜயலெஷ்மி* அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
*வி.வே.விஸ்வேஸ்வரன், திருவானைக்காவல்*












