தமிழ்நாடு

“முன்னோடியாக திகழும் ஆவூர் ஊர்புற நூலகம்”.

Email :126

“முன்னோடியாக திகழும் ஆவூர் ஊர்புற நூலகம்”

ஆக்கம்:
எஸ் சிவகுமார்,
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்.

ஆவூர் ஊர்புற நூலகம் ஒரு சமூக விழிப்புணர்வு மையமாக செயல்படுவது, குழந்தைகளின் கல்விக்காக நூலகர் ப. நாகலட்சுமி அவர்கள் முழுமையாக அர்ப்பணிப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

குழந்தைகள் கல்வி என்பது எந்த நேரத்திலும் தடைபடக் கூடாத ஒரு தொடர்ந்து ஒளிரும் விளக்கே.

பள்ளி நாட்களில் கல்வி பயிலும் குழந்தைகள், விடுமுறை நாட்களிலும் கற்றலை நிறுத்தாமல் ஊர்புற நூலகங்களை தேடிச் செல்கின்றனர்.

ஆவூர் கிராமத்தில் இந்த எண்ணத்தை வேரூன்றச் செய்தவர் நூலகர் ப. நாகலட்சுமி அவர்கள்.

அவர்கள் குழந்தைகளை படிக்க ஊக்குவிப்பதோடு மட்டும் நிற்காமல், ஓவியம் வரைதல், கதை சொல்லுதல் போன்ற படைப்பாற்றல் பயிற்சிகளும் வழங்குகின்றார்.

மாணவர்கள் நூலகம் வர முடியாத பள்ளி நேரங்களில், பள்ளிகளுக்கே நூல்களை கொண்டு சென்று, குழந்தைகள்  தொடர்ச்சியாக படிக்க வழிவகை செய்கிறார்.

இதற்கு அதிகம் துணை புரிவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு. சமூக அக்கறையுடன் செயல்படும் நாகலட்சுமி அவர்கள், கிராம குழந்தைகளுக்கு கல்விச் சுடராய்த் திகழ்கிறார்.

ஆவூர் ஊர்புற நூலகம், குழந்தைகள் தன்னிச்சை கற்றலுக்கு (Self-Learning) சிறந்த தளமாக திகழ்வது, மற்ற ஊர்ப்புற நூலகங்களுக்கும் உன்னதமான முன்னுதாரணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts