• Home
  • தமிழ்நாடு
  • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவிகளுக்கு சீர் வாசகர் வட்டத்தின் இளையோர் நூலகத் முதல் வெளியீடான அன்பளிப்பு சிறுகதை நூலினையும் இனிப்பையும் வழங்கினார்.
தமிழ்நாடு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவிகளுக்கு சீர் வாசகர் வட்டத்தின் இளையோர் நூலகத் முதல் வெளியீடான அன்பளிப்பு சிறுகதை நூலினையும் இனிப்பையும் வழங்கினார்.

Email :72

காமராசர் பிறந்தநாளைத் தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாகத் தமிழகம் முழுவதும் கொண்டாடி வரும் வேளையில் 15.07.2025 இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்தில் காட்டூர் பாப்பாகுறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்

மாணவிகளுக்கு சீர் வாசகர் வட்டத்தின் இளையோர் நூலகத் முதல் வெளியீடான அன்பளிப்பு சிறுகதை நூலினையும் இனிப்பையும் வழங்கி இளையோர் நூலகத் திட்டத்தை தொடங்கி வைத்தார். கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய அமைச்சர் மாணவர்கள் தத்தம் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சீர் வாசகர் வட்டத்தின் நிறுவுநர் கவிஞர் தம்பி, மண்டலப் பொறுப்பாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts