• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரியில் பேராயர் கசிமிர் ஞானாதிக்கம் பிறப்பின் நூற்றாண்டு விழா!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பேராயர் கசிமிர் ஞானாதிக்கம் பிறப்பின் நூற்றாண்டு விழா!

Email :189

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பேராயர் கசிமிர் ஞானாதிக்கம் பிறப்பின் நூற்றாண்டு விழா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வேதியியல் துறை சார்பாக மறைந்த சென்னை மயிலை பேராயரின் பிறப்பின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வேதியியல் துறையின் முன்னாள் துறைத்தலைவர் பேராயர் கசிமிர் ஞானாதிக்கம். கல்லூரியின் முதல்வராகவும் அதிபராகவும் மதுரை மறை மாநில சேசு சபையின் தலைவராகவும் பணியாற்றியவர். பிறகு ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மதுரை மற்றும் சென்னை மயிலை பேராயராகப் பணியாற்றினார்.

இவரின் பிறப்பின் நூற்றாண்டு விழா கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. தலைமையில் நடைபெற்றது. கல்லூரிச்செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச., கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. இணை முதல்வர் முனைவர் த.குமார், இயேசு சபை அருள்தந்தையர்கள் முன்னாள் இந்நாள் பேராசிரியர்கள் முன்னாள் இந்நாள் மாணவர்கள் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர். மேனாள் துறைத்தலைவர் கே.எஸ். அருள்சாமி அவர்கள் பேராயர் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

வேதியியல் துறையின் முதல் முனைவர் பட்ட நெறியாளர் பேராயர் அவர்களே என்பதனையும், துறையின் மண் பரிசோதனை ஆய்வகத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் என்பதனையும் எடுத்துக் கூறினார். மேனாள் துறைத்தலைவர்கள் முனைவர் கே.எஸ்.அருள்சாமி, ரொசாரியோ ராஜ்குமார், எஸ்.ராஜா, எஸ்.ஆர். பீட்டர், எம்.அமலதாசன், பாஸ்கல் ரெஜிஸ், மேனாள் இணை முதல்வர் முனைவர் அலெக்ஸ் ரமணி, முனைவர் சேவியர், துறைப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதுநிலை மற்றும் இளநிலை மாணவர்கள் விழாவில் பங்கேற்றுச் சிறப்பு செய்தனர்.

– சே.சைமன் & ஆ.நுதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts