• Home
  • தமிழ்நாடு
  • இலக்கோடு பயணிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் எப்போதும் துணை நிற்கும்!”.
தமிழ்நாடு

இலக்கோடு பயணிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் எப்போதும் துணை நிற்கும்!”.

Email :197

“இலக்கோடு பயணிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் எப்போதும் துணை நிற்கும்!” Jesuit Education Scholarship நிகழ்வில் செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் உறுதி. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் வறுமையான குடும்பப் பிண்ணனி, பெற்றோரை இழந்த மாணவர்கள், குக்கிராமங்களிலிருந்து படிக்கும் முதல் தலைமுறையினர்  எனத் தம் மாணவர்களின் குடும்பச் சூழலை ஆய்ந்து ஒவ்வொரு பருவத்திலும் அவர்களுக்கான கல்வி நிதி உதவியைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

அந்த அடிப்படையில் இக்கல்வி ஆண்டிற்கான நிதி உதவி வழங்கும் விழா கல்லூரி நூலக அரங்கில் அமைந்துள்ள  அருள்தந்தை கே.பி. ஜோசப் அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரி செயல்பாடு அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே‌.ச. மற்றும் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி‌மரியதாஸ், சே‌.ச. ஆகியோர் பங்கேற்று இந்நிகழ்வை சிறப்பித்தனர். 

350 மாணவர்களுக்கு 14 லட்ச ரூபாய் நிதிய ரவி வழங்கப்பட்ட எங்கள் நிகழ்வில் இயேசு சபை கல்வி உதவித்தொகை இயக்குனர் அருள்முனைவர் அருள்ஒளி சே.ச. வரவேற்புரையாற்றினர். தலைமை உரை ஆட்சி அதிபர் இலக்கோடு பயணிக்கிற மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் எப்போதும் துணை நிற்கும் என்பதற்கு சாட்சியே இந்த நிகழ்வு. இது மட்டுமல்ல காலை உணவு திட்டம் மதிய உணவு திட்டம் உள்ளிட்ட பல வழிகளில் மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு கல்லூரி நிர்வாகம் துணை நிற்கிறது என்பதைப் பதிவு செய்தார். செயலர் தந்தை தம் துறையில் வாழ்த்துரையில் கல்வி வழி மனித வளர்க்கும் முயற்சியில் நாங்கள் மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். பெற்றோர்கள் அதை உணர்ந்து மாணவர்கள் சமூகத்தாரோடு தலைமைத்துவம் மிக்கவர்களாக உருவாகிட உற்சாகப்படுத்த வேண்டும். இன்று மாணவர்களாக அமர்ந்திருக்க கூடிய உங்கள் பிள்ளைகளை எதிர்காலத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் சந்திப்பதற்கு அனுமதி கேட்டு வரக்கூடிய உயர்வுக்கு அவர்கள் வளர வேண்டும். அதுதான் இந்த விழாவில் வெற்றியாக அமையும் என தெரிவித்தார்.
தொடர்ந்து வாழ்த்துரையாற்றிய கல்லூரி முதல்வர் இன்றைய தினம் தங்கள் வேலையை விட்டுவிட்டு பிள்ளைகளுக்காக வந்திருக்கக்கூடிய பெற்றோர்களை பாராட்டுகிறேன். கல்லூரி நிர்வாகத்தோடும் பேராசிரியர்களோடும் பெற்றோர்களும் இணைந்து மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இயேசுசபைசபை கல்வி நிதி உதவி ஏற்ற மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நிறைவில் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் நன்றியுரையாற்றினார்.
– வெர்ஜின் பிரான்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts