தானம் செய்கிறோமா? மண்ணைக் கொல்கிறோமா?
பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்கள், பிளாஸ்டிக் கவர்களை அங்கேயே வீசாமல் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்! – தண்ணீர் அமைப்புநாய்க்கு உணவளிப்பது தர்மம்; அதே நேரத்தில், பிளாஸ்டிக் கவர்களைப் பொது இடங்களில் வீசுவது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு. வேண்டுகோள்
சாலையோரம், மைதானம் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள நாய்களுக்கு உணவளிப்பது மனிதநேயச் செயலாகும். ஆனால், நாய்களுக்கு பிஸ்கட் வழங்கிவிட்டு, அவற்றின் பிளாஸ்டிக் கவர்களைச் சாலையிலும் மைதானத்திலும் வீசிச் செல்வது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நாய்களுக்கு உணவளிப்பதில் காட்டும் அக்கறையை, பூமியைப் பாதுகாப்பதிலும் காட்ட வேண்டும். மண்ணில் மக்காத பிளாஸ்டிக் கவர்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன், விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
நாய்க்கு உணவளிப்பது தர்மம்; அதே நேரத்தில், பிளாஸ்டிக் கவர்களைப் பொது இடங்களில் வீசுவது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு.
எனவே, பொது இடங்களில் நாய்களுக்கு உணவு வழங்குபவர்கள், பயன்படுத்திய பிளாஸ்டிக் கவர்களைத் தாங்களே சேகரித்துக் குப்பைத்தொட்டியில் போட்டு, அந்த இடத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று தண்ணீர் அமைப்பு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
“உயிர்களுக்கு உணவளிப்போம்; இயற்கையையும் பாதுகாப்போம்!”
மனிதநேயம் என்பது ஓர் உயிருக்கு உணவளிப்பதில் மட்டுமல்ல; அனைத்து உயிர்களும் வாழும் பூமியைப் பாதுகாப்பதிலும் இருக்கிறது.
கே.சி.நீலமேகம்,
செயல் தலைவர்,
தண்ணீர் அமைப்பு,
பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம் – சுற்றுச்சூழலைக் காப்போம்!










