நேற்று 04.03.2025 சமூகப் பணித்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் எலைட் சிறப்பு பள்ளியுடன் இணைந்து நடத்திய சிறப்பு மாணவர்களுக்கான கலைசார் கல்வி மூலம் பல குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும் கதை சொல்லியுமான கார்த்திகா கவின் குமார் அவர்கள் குழந்தைகளுக்கு கலைசார் கல்வியினை வழங்கினார். அது மட்டும் இல்லாமல் பல கதைகள் சொல்லி குழந்தைகளை மகிழ்வித்தார். எலைட்சிறப்பு பள்ளியின் தாளாளர் திருமதி ஜி .முத்துலட்சுமி அவர்கள் கலந்து கொண்டார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து ஆசிரியர் மேற்பார்வையாளரான முனைவர் என் .ராஜவேல் அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திருச்சிராப்பள்ளி சமூக பணித்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் அகிலன் சமூகப்பணி பயிற்சியாளர் அவர்கள் வரவேற்புரை மற்றும் நன்றியுரை நிகழ்த்தினார். இவ்விழாவில் 45 குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.














