• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி புனித வளனார் கல்லூரியில் ATC CAMP-2 TN BN NCC தமிழ்நாடு 2 வது பட்டாலியன் திருச்சி, கடந்த 11.05.2026 அன்று முதல்  20.05.2026 வரை திருச்சியில் ஆண்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு

திருச்சி புனித வளனார் கல்லூரியில் ATC CAMP-2 TN BN NCC தமிழ்நாடு 2 வது பட்டாலியன் திருச்சி, கடந்த 11.05.2026 அன்று முதல்  20.05.2026 வரை திருச்சியில் ஆண்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

Email :7

திருச்சி புனித வளனார் கல்லூரியில் ATC CAMP-2 TN BN NCC தமிழ்நாடு 2 வது பட்டாலியன் திருச்சி, கடந்த 11.05.2026 அன்று முதல்  20.05.2026 வரை திருச்சியில் ஆண்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் சுமார் 524 தேசிய மாணவர் படை(தரைப்படை பிரிவை ) சார்ந்த பல  கல்லூரி மற்றும் பள்ளியளவில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டு மலையேறும் பயிற்சி, துப்பாக்கி சுடும்  பயிற்சி, தலைமை பண்புகளை வளர்க்கும் பர்சனாலிட்டி டெவலப் மென்ட் வகுப்பு,
போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு

பல்வேறு துறைத் சார்ந்த நிபுணர்களை கொண்டு மாணவ, மாணவியருக்கு சிறப்பு   பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் ராணுவ   தற்காப்பு பயிற்சி, அணிவகுப்பு , துப்பாக்கி சுடும் பயிற்சி உடன் AI தொழில் நுட்பம் பற்றிய கருத்தரங்கு , மின்னணு குறறங்களை பற்றிய விழிப்புணர்வு முதலுதவி ,  இதயம் மறறும் சுவாசத்தை மீட்டெடுக்கும் அவசர சிகிச்சை பயிற்சி , ட்ரோன் தொழில்நுட்பம் , ராணுவ
அதிகாரி தேர்வு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த முகாமின் நிறைவு விழாவில் புனித வளனார் கல்லூரியின் அதிபர் தந்தை முனைவர் ஏ. பவுல்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்பான உரையாற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசினை வழங்கினார்கள்,

மற்றும் இந்த பயிற்சிக்கு தலைமை அதிகாரி கர்னல் ஆசிஷ் வர்மா துணை அதிகாரி கர்னல் பிகே வேலு தலைமை ஏற்று வழி நடத்தினார்கள் இவர்களுக்கு உறுதுணையாக ANO அதிகாரிகள், SM, JCO & PI ஸ்டாப் மற்றும் அலுவலக பணியாளர்களும் கேம்ப் சிறக்க பணியாற்றி மாணவ மாணவியர் உயர்வுக்கு வழி காட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts