திருச்சி செந்தண்ணீப்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 2012ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 14 வருடத்தில் 11 வருடம் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி இந்த வருடமும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

இதனை முன்னிட்டு பள்ளி தலைமையாசிரியர் எழியரசியிற்கும், பள்ளியில் முதல் மதிப்பெண் முகமது இம்தியாஸ் மாணவருக்கும் மக்கள் சக்தி இயக்க சார்பில் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் பொன்னாடை போர்த்தி,வாழ்த்தி,பாராட்டுகள் தெரிவித்தார்கள்.

நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்கள். நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்துக்கொண்டார்கள்.













