
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமையில் 19.02.25 நடைப்பெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் மேனகா ஆகியோர் பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் உடல் மன அளவில் ஏற்படும் பாதிப்புகள் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போதைப்பொருள் இல்லாத பள்ளியாகவும் மாவட்டமாகவும் மாநிலமாகவும் மாற்றுவதற்கு

மாணவர்களின் பங்கு குறித்தும் சைபர் கிரைம் குற்றங்களினால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.















