• Home
  • தமிழ்நாடு
  • பயோ–இன்னோவேத்தான் 2026 – தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளியில் நடைபெற்றது.
தமிழ்நாடு

பயோ–இன்னோவேத்தான் 2026 – தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளியில் நடைபெற்றது.

Email :54

பயோ–இன்னோவேத்தான் 2026 – தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளியில் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி), உயிர்தொழில்நுட்பத் துறை சார்பில், Institution’s Innovation Council – IIC ஆதரவுடன் BIO-INNOVATHON 2026 நிகழ்ச்சி 08.01.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. “Innovation for Life – Bridging Biology and Technology for a Sustainable Future” (நிலைத்த எதிர்காலத்திற்காக உயிரியல் மற்றும் தொழில்நுட்பத்தை இணைக்கும் புதுமை) என்ற கருப்பொருளில், Sustainable Development Goals மையமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
தொடக்க விழா, உயிர்தொழில்நுட்பத் துறைத் தலைவர் முனைவர் வி. ஸ்வப்னா அவர்களின் வரவேற்புரை மூலம் தொடங்கியது. அதனை தொடர்ந்து, தூய வளனார் கல்லூரியின் (தன்னாட்சி) முதல்வர் அருட்தந்தை முனைவர் எஸ். மரியதாஸ் SJ அவர்கள் ஆசியுரையாற்றி, மாணவர்கள் தங்களின் புதுமையான எண்ணங்களை சமூகப் பயன்பாட்டிற்குரிய தீர்வுகளாக மாற்ற வேண்டும் என ஊக்கமளித்தார்.
முதன்மை உரையை (Keynote Address) மெட்ஃபோர்டு டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட், சேலம் நிறுவனத்தின் சீஃப் ஆபரேஷன்ஸ் ஆபிசரும் இணை நிறுவுநருமான திரு. லோகேஸ்வரன் ஜே அவர்கள் வழங்கினார்.
BIO-INNOVATHON 2026 நிகழ்வில், தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 33 கல்லூரிகள் மற்றும் 45 துறைகளை சார்ந்த 65 அணிகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றன. ECE, EEE, பயோமேடிக்கல் எஞ்சினியரிங், உயிர்த்தொழிற்நுட்பவியல், உயிர்வேதியியல், மருந்தியல், சித்தா, கணினி அறிவியல், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளில் இருந்து வந்த மாணவர்கள், சமூகம் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளும் புதுமையான யோசனைகள் மற்றும் மாதிரிகளை முன்வைத்தனர்.
விழா நிறைவு உரை (Valedictory Address)-யை தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி) செயலர் அருட்தந்தை முனைவர் எம். ஆரோக்கியசாமி சேவியர் SJ அவர்கள் வழங்கினார். BIO-INNOVATHON 2026 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் இணைந்து செய்த முயற்சிகளை அவர் பாராட்டினார். மேலும், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகைகளுடன் கூடிய பரிசுகள் வழங்கப்பட்டு, அவர்களின் புதுமை, படைப்பாற்றல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உறுதி பாராட்டப்பட்டது. இதில் முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்பட்டதுடன், இந்திய அறிவு முறைமை (Indian Knowledge System) சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு செயலாளராக முனைவர் அ. ஆஷா மோனிகா அவர்கள் சிறப்பாக பணியாற்றினார். நன்றி உரை-யை உயிர்தொழில்நுட்பத் துறையின் மூத்த பேராசிரியர் முனைவர் ஆ. எட்வர்ட் அவர்கள் வழங்கி, நிர்வாகம், முதன்மை விருந்தினர், மதிப்பீட்டாளர்கள், பங்கேற்பாளர்கள், பேராசிரியர்கள், அலுவலக மற்றும் ஆய்வக பணியாளர்கள், மாணவர் தன்னார்வலர்கள் அனைவருக்கும் தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.
BIO-INNOVATHON 2026 நிகழ்ச்சி, புதுமை சார்ந்த கல்வி, துறைகள் தாண்டிய ஒத்துழைப்பு மற்றும் மாணவர்கள்-இளம் ஆராய்ச்சியாளர்களிடையே தொழில் முனைவுச் சிந்தனையை வளர்த்தெடுக்கும் வகையில், மிகுந்த வெற்றியுடன் நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts