பாராட்டு விழா!
இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேனிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியத் திறனறிவுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவி தேவஸ்ரீக்குப் பாராட்டுவிழா நடைபெற்றது.

மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இராமகிருஷ்ணன் தலைமையேற்க தனிவட்டாட்சியர் உதயசங்கர் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை கனகலட்சுமி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் நலத்துறையின் திட்ட ஆலோசகர் ராஜாஜெகஜீவன் கலந்து கொண்டு மாணவிக்கு ஊக்கப்பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள 98 மேனிலைப்பள்ளிகளில் இளமனூர் பள்ளி மாணவி தேவஸ்ரீ ஊக்கத்தொகை பெறுவதற்குத் தேர்வு பெற்றுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை, தொழில் முனைவோர் மேம்பாட்டுப் புத்தாக்க நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப்போட்டியில் (SIDP) இரண்டாம் இடம் வென்ற மாணவிகளுக்கும் ஊக்கப்பரிசு வழங்கி வாழ்த்தினார். ஜூடோ விளையாட்டில் மாவட்ட அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் பிரதீப்விஜயை வாழ்த்தினார்.

அறிவியலில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிகள் செயல் விளக்கம் செய்து காட்டினர். தமிழாசிரியர் மகேந்திர பாபு நன்றி கூறினார்.













