திருச்சி தென்னக இரயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டங்கள் குறித்த பயிற்சி 12.12.2024 நடைபெற்றது.

மாவட்ட குழந்தை நலக் குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகள் பாதுகாப்பில் இரயில்வே பணியாளர்களின் பங்கு குறித்தும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து

குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் இளஞ்சிறார் நீதி சட்டம் மற்றும் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு மற்றும் 1098, 181, 14567, 1930 இலவச தொலைபேசி எண்களின் செயல்பாடுகள் பணிகள் குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியில்
150 க்கும் மேற்பட்ட இரயில்வே பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.














