“கணிதத்தில் சிறந்து விளங்கும் குழந்தைகள்”
ஸ்ரீரங்கம் சண்முகா உதவிப் பெறும் நடுநிலைப் பள்ளியில் கணித பாடத்தில் சிறந்து விளங்கும் குழந்தைகள் பலர் உள்ளனர். இவர்கள் வெளிப்படுத்தும் திறமைகளும் முயற்சிகளும் மிகவும் பாராட்டத்தக்கவையாக உள்ளன.

இந்த வளர்ச்சிக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தலைமை ஆசிரியர் திருமதி டி. ஜெயபாக்கியம் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளார்.
கணிதம் என்பது செயல்முறை சார்ந்த பாடமாக இருப்பதால், திருமதி ஜி. ஜெயந்தி மற்றும் திருமதி வி. ஆனந்தவல்லி ஆகிய ஆசிரியர்கள் தங்களின் வழிகாட்டுதலால் குழந்தைகளுக்கு கணித பாடத்தை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றி நடத்துகின்றனர். குறிப்பாக, குறைந்த செலவில் கற்றல் சாதனங்களை (low-cost teaching aids) பயன்படுத்தி கணித பாடத்தை கற்பிக்கும் முறையில் குழந்தைகளின் ஆர்வமும் புரிதலும் அதிகரிக்கிறது.
குழந்தைகள் பள்ளி நேரத்திற்குப் பின்பும் விடுமுறை நாட்களிலும் தங்கள் கணித பயிற்சியை நிறுத்தாமல் தொடர்ந்து பாடங்களில் மேம்படுகின்றனர். பள்ளி நிர்வாகி திருமதி சித்ரா குழந்தைகளின் வளர்ச்சியில் தனது பங்களிப்பை பெரிதும் வழங்கி வருகிறார்.
இந்த ஒருமித்த முயற்சிகளால், குழந்தைகள் கணித பாடத்தில் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி, போட்டித் தேர்வுகள் மற்றும் பருவத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனர். இவ்வாறு மாணவர்கள் மட்டும் அல்லாமல், அவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் பெருமைக்கு உரியவர்கள்.
கணிதத்தில் குழந்தைகள் சிறந்து விளங்குவதற்கு இவர்களின் கூட்டு முயற்சி முன்மாதிரியாக விளங்குகின்றன.













