தமிழ்நாடு

“குழந்தைகள் சுய கற்றல் மையம்”

Email :115

“குழந்தைகள் சுய கற்றல் மையம்”
திருச்சிராப்பள்ளி மாவட்டம் உப்பிலியாபுரம் ஒன்றியம் வெங்கடாசலபுரம், கிருஷ்ணாபுரம்,  புடலாத்தி அரசு உதவி பெறும் பள்ளிகளில் “சுய கற்றல் மையங்கள்” சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சுயக் கற்றல் என்பது குழந்தைகள் தங்கள் கல்வியில் தாங்களே முனைந்து, பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கருத்துகளை ஆராயும் செயல்முறையாகும்.
இது ஆர்வத்தை, சிந்தனையை, மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை வளர்க்கிறது,
வாழ்நாள் முழுவதும் கற்றல்! தொடர்வதற்கான அடிப்படையாக விளங்குகிறது.

சுயக் கற்றல் குழந்தைகளுக்கு ஏன் முக்கியம்?

சுயக் கற்றல் குழந்தைகளை தங்கள் கல்வியில் முழுமையாக பொறுப்பேற்க ஊக்குவிக்கிறது, இதனால் தன்னம்பிக்கை மற்றும் சுயநிறைவு பெருகுகிறது. அவர்கள் குறிக்கோள்களை அமைக்கவும், நேரத்தை நிர்வகிக்கவும், முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யவும் கற்றுக்கொள்கிறார்கள்.
குழந்தைகள் தாங்களே கற்றுக்கொள்ளும்போது, அவர்கள் தகவல்களை பகுப்பாய்வு செய்யவும், கேள்வி கேட்கவும், மற்றும் விவரிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள், இதனால் தகுதியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

சுயமாக தலைப்புகளை ஆராய்வதால்,

குழந்தைகள் புது கோணங்களில் சிந்திக்க முடிகிறது, இதன் மூலம் புதுமை மற்றும் படைப்பாற்றல் அதிகரிக்கிறது.
ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமாக கற்கிறார்கள்.
சுயக் கற்றல் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப முன்னேற அனுமதிக்கிறது.
சுயக் கற்றல் செயல்பாட்டின் போது சவால்களை கடக்கும்போது குழந்தைகள் பொறுமையும் தன்னம்பிக்கையும் வளர்க்கிறார்கள்.
வேகமாக மாறும் உலகில், சுயக் கற்றல் குழந்தைகளை புதிய அறிவையும் திறன்களையும் விரைவாகப் பெற உதவுகிறது.
ஆர்வம் மற்றும் கேள்வி கேட்கும் பழக்கத்தை வளர்ப்பதால், சுயக் கற்றல் குழந்தைகளால் வாழ்நாள் முழுவதும் கற்றல் தொடர முடிகிறது.

சுயக் கற்றலுக்கான செயல்பாடுகள்:

ஆர்வமான புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளைப் படித்தல்.
கல்வி பயன்பாடுகள் மற்றும் ஆன்லைன் பாடங்களை ஆராய்தல்.
அறிவியல் சோதனை மற்றும் கலை போன்ற  செயல்பாடுகளில் ஈடுபடுதல்.
குழுக்களில் கலந்துரையாடல் மற்றும் குழு கற்றலின் மூலம் கற்றுக்கொள்வது.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் வடிவமைப்பாளர் எஸ். சிவக்குமார் கூறியதாவது,

“சுயக் கற்றல்  கல்வியைப் பெறுவதற்கானது அல்ல;

இது குழந்தைகளுக்கு மாறும் உலகில்  செயல்பட தேவையான திறன்களையும் மனப்பாங்கையும் வளர்க்க உதவுகிறது. குழந்தைகளுக்கு சுயக் கற்றலை ஊக்குவிப்பது அவர்களின் கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட வெற்றிக்கு அடித்தளமாக அமையும்”
வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் V. ரவிச்சந்திரன் அவர்கள் கூறியதாவது
” மாணவர்கள் பள்ளி முடித்து வீட்டுக்கு சென்ற பிறகு படிக்கும் பழக்கம் வளர்ந்துள்ளது. விடுமுறை நாட்களில் படிக்கிறார்கள். வீட்டில் எழுத்து பயிற்சி செய்கிறார்கள். எங்கள் பள்ளியின் கல்வித் தரும் மேலோங்கி உள்ளது. பெற்றோர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு நல்கி வருகிறார்கள். தற்போது சுயமாக படிக்கும் பழக்கம் வளர்ந்துள்ளது” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts