• Home
  • தமிழ்நாடு
  • கிருஸ்துராஜ் கல்லூரி,  சமூகப் பணித்துறை, பஞ்சப்பூர், திருச்சி. 22ஆம் ஆண்டு கிராமிய முகாம் – 2025, இன்று 07.10.2025 முதல் 09.10.2025 வரை மேக்குடி, மேல ஆலம்பட்டி, நடுப்பட்டி, செங்குறிச்சி மற்றும் ஆலம்பட்டி ஆகிய கிராமங்களில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு

கிருஸ்துராஜ் கல்லூரி,  சமூகப் பணித்துறை, பஞ்சப்பூர், திருச்சி. 22ஆம் ஆண்டு கிராமிய முகாம் – 2025, இன்று 07.10.2025 முதல் 09.10.2025 வரை மேக்குடி, மேல ஆலம்பட்டி, நடுப்பட்டி, செங்குறிச்சி மற்றும் ஆலம்பட்டி ஆகிய கிராமங்களில் சிறப்பாக நடைபெற்றது.

Email :71

கிருஸ்துராஜ் கல்லூரி,  சமூகப் பணித்துறை, பஞ்சப்பூர், திருச்சி. 22ஆம் ஆண்டு கிராமிய முகாம் – 2025, இன்று 07.10.2025 முதல் 09.10.2025 வரை மேக்குடி , மேல ஆலம்பட்டி, நடுப்பட்டி, செங்குறிச்சி மற்றும் ஆலம்பட்டி ஆகிய கிராமங்களில் சிறப்பாக நடைபெற்றது.

இன்று 07.10.2025 காலை “சுற்றுப்புறமும் & சுகாதாரமும்” என்ற தலைப்பில் முன்னாள் மாணவி – CISWO & சமூகப் பணியாளர் திருமதி நான்சி ஆரோக்கியதாஸ் அவர்கள் கருப்பொருள் உரை ஆற்றினார்.

திரு. V. ராஜா, ஊராட்சி மன்ற செயலாளர், முன்னிலை வகித்தார். பேராசிரியர் S. இசபெல்லா துறைத் தலைவர், சமூகப் பணித்துறை, தொடக்க உரை வழங்கினார். திரு. A. லாரன்ஸ், மு.ஊராட்சி மன்றத் தலைவர், தலைமை தாங்கினார்.  திருமதி J. வெண்ணிலா வாழ்த்துரை வழங்கினார்.

இன்று 07.10.2025 மாலை “ஆரோக்கியமான மனநலம்” என்ற தலைப்பில் திரு. ஜா. கரன் லூயிஸ், சமூக மனநல ஆலோசகர் & திட்ட இயக்குனர் (மனநல மையம்), ஆத்மா மனநல மருத்துவமனை, திருச்சி, கருப்பொருள் உரை ஆற்றினார். திருமதி N. சித்ரா, வட்டார இயக்க அலுவலர், மணிகண்டம், முன்னிலை வகித்தார். திரு. P. மாரிமுத்து, மேக்குடி ஊராட்சி, தலைமை தாங்கினார்.

இரண்டாம் நாள் 08.10.2025 காலை “கண் மருத்துவ முகாம்”, ஜோசப் கண் மருத்துவமனை, திருச்சி. திருமதி P. பரமேஸ்வரி, மேக்குடி ஊராட்சி, 3 ஆவது வார்டு உறுப்பினர், முன்னிலை வகித்தார். திரு. J.D. சாமுவேல் விங்கிலர், Camp Team Incharge, தொடக்க உரை வழங்கினார்.

திரு. P. ஏழுமலை, மேக்குடி ஊராட்சி, 4 ஆவது உறுப்பினர், தலைமை தாங்கினார். திருமதி சுபா பிரபு, நிர்வாக அதிகாரி, கருப்பொருள் உரை ஆற்றினார். பேராசிரியர் S. இசபெல்லா, துறைத் தலைவர், சமூகப் பணித்துறை, கிருஸ்துராஜ் கல்லூரி, திருச்சி, வாழ்துரை வழங்கினார். அன்று மாலை திருமதி K. சண்முகப்பிரியா, காவல் ஆய்வாளர், சைபர் கிரைம், திருச்சி, “இணையத்தின் வழிக் குற்றம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

மூன்றாம் நாள் 09.10.2025 காலை பேராசிரியர் S. இசபெல்லா, துறைத் தலைவர், சமூகப் பணித்துறை, கிருஸ்துராஜ் கல்லூரி, திருச்சி, தொடக்க உரை வழங்கினார். ஸ்மைல் திரு. இ. ராபின்சன் திவாகரன், முன்னாள் மாணவர் – CISWO நிறுவனர் & தலைவர், ஸ்மைல் டிரஸ்ட், மஞ்சம்பட்டி, மணப்பாறை, கருப்பொருள் உரை ஆற்றினார். அன்று மாலை திருமதி S. லெட்சுமி VHN, ஆரம்ப சுகாதார நிலையம், நாகமங்கலம், முன்னிலை வகித்தார்.

திருமதி P. கமலா, உதவிப் பேராசிரியர், சமூகப் பணித்துறை, கிருஸ்துராஜ் கல்லூரி, திருச்சி, தொடக்க உரை வழங்கினார். திரு. G. கண்ணதாசன், காவல் ஆய்வாளர், மணிகண்டம், காவல் நிலையம், சட்டம் மற்றும் ஒழுங்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

பேராசிரியர் S. இசபெல்லா, துறைத் தலைவர், சமூகப் பணித்துறை, கிருஸ்துராஜ் கல்லூரி, திருச்சி, வாழ்த்துரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts