• Home
  • தமிழ்நாடு
  • கிருஸ்து ராஜ் கல்லூரி திருச்சி-12. 2026, ஜனவரி 26 “குடியரசு தின விழா” சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு

கிருஸ்து ராஜ் கல்லூரி திருச்சி-12. 2026, ஜனவரி 26 “குடியரசு தின விழா” சிறப்பாக நடைபெற்றது.

Email :76

கிருஸ்து ராஜ் கல்லூரி திருச்சி-12. 2026, ஜனவரி 26 “குடியரசு தின விழா” சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் ரா.சுகுமார் வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரி முதல்வர் முனைவர். பா.பாலமுருகன் தேசிய கொடி ஏற்றி குடியரசு தின சிறப்புரை வழங்கினார். நமது அரசியலமைப்பின் மகத்துவத்தையும்  குடிமக்களாகிய நமது கடமைகளையும் அறிவுறுத்தினார்.

கல்லூரி மாணவ மாணவியர்களும் தம்மை ஈர்த்த தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட   சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து பேசினர்.

சிறப்பாக உரை நிகழ்த்திய முதல் மூன்று மாணவ மாணவியருக்கு கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திருமதி ச.இசபெல்லா இவ்விழாவினை ஒருங்கிணைத்து நன்றி உரையாற்றினார்.

கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts