
திருச்சி உறையூர் பகுதியில் அமைந்துள்ள சி எஸ் ஐ மருத்துவமனையின் நர்சிங் கல்லூரியில் தேர்வு பயத்தை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் தற்கொலை தடுப்பு சேவை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் திருமதி ரம்யா ரோஸ்லின் முன்னிலை வகித்தார்.
மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூக பணித்துறை பேராசிரியர் சாம் தேவ ஆசீர்வாதம் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆத்மா மனநல மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் மற்றும் தற்கொலை தடுப்பு ஆலோசகர் திரு கரன் லூயிஸ் அவர்கள் சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான நர்சிங் கல்லூரி மாணவிகள் பங்கு பெற்று பயனடைந்தனர்.















