“ஆங்கில செய்தித்தாள் செயல்பாடுகள் – மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்தும் முயற்சி”.
அறிமுகம்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சாமந்தன்பட்டியில், மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் நோக்கில் செய்தித்தாள் செயல்பாடுகள் நடைப்பெற்றன.
தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் ஆங்கில ஆசிரியர் நித்யா அவர்களும் இணைந்து செயல்பாடுகளை மேற்கொண்டனர். விரிவுரையாளர் முனைவர் உஷா வழிகாட்டியாக இருந்தார்
செயல்பாட்டின் தன்மை:
மாணவர்களுக்கு ஆங்கில செய்தித்தாள் வழங்கப்பட்டு, “ஹெட்லைன் ஹண்ட்” எனும் செயல்பாட்டில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக, 15 நிமிடங்கள் நேரமளிக்கப்பட்டு, அந்த செய்தித்தாளில் உள்ள ஐந்து முக்கியமான தலைப்புச் செய்திகள் வாசிக்க சொல்லப்பட்டது. வாசித்த பிறகு, அந்த செய்தியின் சாராம்சம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
மொழிப்பயிற்சியின் முக்கியத்துவம்:
மாணவர்கள் முதல் கட்டமாக தங்களால் புரிந்த பகுதிகளை தமிழில் விளக்கினர். பின்னர், அவர்களுக்கு அந்த செய்திகளின் முக்கியமான ஆங்கில வார்த்தைகள் எடுத்து சொல்லப்பட்டு, ஐந்து வரிகளில் ஆங்கிலத்தில் சாராம்சம் எழுத வழிகாட்டப்பட்டது. இதன் மூலம், அவர்கள் புதிய சொற்களை அறிந்து கொண்டு, சரியான வழியில் மொழிபயிற்சி மேற்கொள்ளும் அனுபவம் கிடைத்தது.

முந்தைய செயல்பாடுகளின் தாக்கம்:
இதே போன்ற செய்தித்தாள் செயல்பாடுகள் ஸ்ரீரங்கம் சண்முகா நடுநிலைப்பள்ளியில் ஏற்கனவே நடைபெற்றன.
இந்த நிகழ்வினை முன்னாள் முதல்வர், திரு. எஸ்.சிவகுமார், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் சிறப்பாக வழிநடத்தியதால், மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக அமைந்தது.
மாணவர்களுக்கு கிடைத்த பயிற்சியின் தாக்கம் சிறப்பாக இருந்ததால், இதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சாமந்தன்பட்டி பள்ளியில் மேற்கொள்ளப்பட்டது.
மாணவர்களின் ஆங்கில மொழிப்பயிற்சி மேம்படவும், தகவல்களை சரியாக புரிந்து கொண்டு தங்களது வார்த்தைகளில் சரியான வடிவில் வெளிப்படுத்தவும், இத்தகைய செயல்பாடுகள் உதவுகின்றன.
முடிவுரை:
மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை வளர்க்க, செய்தித்தாள் போன்ற பயிற்சி செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தகவல்களை ஆராய்ந்து, புரிந்து கொண்டு, தங்களது சொந்த வார்த்தைகளில் வடிவமைக்க இது உதவுகிறது.












